1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer>
music artist

Latest News

  • E-Magazine -

    Youthworld Magazine in online Now!!!

Youthworld - Galleries | Jokes

Jokes

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....



 

 

 

_________________
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
_________________
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!
_________________
கண் டாக்டர் : அந்த போர்டில் உள்ள எழுத்துக்களை படிங்க!
நோயாளி : போர்டு எங்க டாக்டர் இருக்கு?
_________________
ஸ்பின் பெளலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?
பால திருப்புற சுந்தரி
_________________

எல்.ஐ.ஸி மாடியிலிருந்து லட்டைப் போட்டால் என்னவாகும்?
பூந்தியாகும்.
_________________
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையை கொடைக்கானலா வளர்க்கும்?
_________________
பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
கர்ப்பமா போவணும்
_________________
கேள்வி : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
பதில் : யானை
கேள்வி :அதை விட பெரிய மிருகம்?
பதில் : இன்னொரு யானை
_________________

நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
_________________

வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து
தருவாங்க.
_________________

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல்
கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?


மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
_________________

ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :

"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள்
இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
_________________

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

_________________

மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?

கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேலாளர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார். அதனால்தான்???

_________________
என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்
_________________

ஒரே குழப்பமா இருக்குடி..

எதுக்கு..?

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!

_________________
பரீட்சையில் காப்பி அடிச்சா ஒரு ஆண்டுதானே சிறை..? உனக்கு ஏன் ரெண்டு வருஷம் போட்டாங்க..?

சிறையில் இருக்கறப்போ அனுமதி வாங்கி அக்டோபர் பரீட்சை எழுதினேன்..அப்போவும் காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டேன்..!

_________________



Visitors Status

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday20
mod_vvisit_counterYesterday252
mod_vvisit_counterThis week1776
mod_vvisit_counterThis month1076
mod_vvisit_counterAll184210

Who's Online

We have 8 guests online

Tell a Friend

Tv Show

tv_show.gif

User Poll

Please Enter Your Feed Back About This Site

 

 

 

 

 

 

 

 


  Results

Flash News



Get the Flash Player to see this player.